வால்பாறை தேயிலை தோட்டத்தில் விஷக்குளவி கடித்து 15 தொழிலாளர்கள் காயம்

கோவை: வால்பாறையை அடுத்துள்ள இஞ்சிப்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் விஷக்குளவி கடித்து 15 தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வால்பாறையை அடுத்துள்ள இஞ்சிப்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் விஷக்குளவி கடித்து 15 தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது இஞ்சிப்பாறை எஸ்டேட். இங்கு 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அருகில் உள்ள வனப்பகுதியில் கூட்டில் இருந்து விஷக்குளவி திடீரென பறந்து வந்து கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்களை தாக்கத்தொடங்கியுது.

இதனால் பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடத் துவங்கினர். இருப்பினும் ஓடிய தொழிலாளர்களை தலை, கை, கால், முகம் ஆகிய இடங்களில் விஷக்குளவி கடித்தன. இச்சம்பவத்தில் 15 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.



இதனையடுத்து, அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு தேயிலை தோட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பஞ்சவர்ணம், அற்புதமணி, மாரியம்மாள், ஞானத்தாய் ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...