திருடிய பைக்கிலேயே பைக் திருட வந்த மேட்டுப்பாளையம் திருடன் கைது..!

கோவை: மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனங்களைத் திருடும் பைக் கொள்ளையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனங்களைத் திருடும் பைக் கொள்ளையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை சாலையில் வ.உ.சி காலணியைச் சேர்ந்தவர் அப்துல் வகாப். இவரது இருசக்கர வாகனம் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் காணாமல் போனது. பின்னர் இதுகுறித்து அப்துல் வகாப் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து, மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு நகர பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அங்கு வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய ஆவணங்களை காண்பிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததில் சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அபுதாகீர் (24) என்பது தெரியவந்தது, இவர் மீது ஏற்கனவே பைக் கடத்தல் சம்பந்தமாக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் வீடுகளில் புகுந்து இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்து வந்ததுடன் கடந்த வாரம் வ.உ.சி காலனி பகுதியில் பைக்கை திருடியதும் தெரியவந்தது.

இதனையடுத்து, அவர் வந்த வாகனத்தைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அபுதாகீர் மீது வழக்கு பதிவு செய்து கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...