பவானி ஆற்றில் இருந்து திருப்பூருக்கு கொண்டு செல்லும் புதிய குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகருக்கு கொண்டு செல்ல உள்ள புதிய குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகருக்கு கொண்டு செல்ல உள்ள புதிய குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கும் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கென 20 குடிநீர் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது கூடுதலாக கோவை மாநகருக்கு 295 மில்லியன் லிட்டரும், திருப்பூர் மாநகராட்சிக்கு 196 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கவும், தலா 1000 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே உள்ள குடிநீர் திட்டங்களுக்கே வறட்சி கால கட்டத்தில் குடிநீர் எடுக்க முடியாமல் திண்டாடி வரும் நிலையில், இதுபோன்ற புதிய திட்டங்களால் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதுடன் 16 குடிநீர் திட்டங்கள் முடங்கும் என குற்றம்சாட்டிய பொதுமக்கள், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகருக்கு கொண்டு செல்ல உள்ள புதிய குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திட்டத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...