மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை 14 நாட்களுக்கு பின் மீண்டும் தொடங்கியது

கோவை: பருவமழை காரணமாக ரயில் பாதையின் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் கடந்த 14 நாட்களாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.

கோவை: பருவமழை காரணமாக ரயில் பாதையின் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் கடந்த 14 நாட்களாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணித்து, நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். இந்த ரயில் பாதையில் மழைக்காலங்களில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுவதால், மலை ரயிலின் பயணம் தடைபட்டு வருகிறது.

கடந்த 15ம் தேதி பெய்த கன மழையால், மலை ரயில் செல்லும் ஹில்குரோவ் - அடர்லி ரயில் நிலையங்களுக்கிடையே மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால், 3 நாட்களுக்கு மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் நிலையில், மீண்டும் பெய்த கன மழையால் கல்லாறு - குன்னூர் இடையிலான மலை ரயில் பாதையில், சுமார் 23 இடங்களில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மீண்டும் மலை ரயில் சேவை நவம்பர் 29ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இதனை தொடர்ந்து, அடர்ந்த மலைக்காட்டின் நடுவே ரயில் பாதையின் மீது விழுந்து கிடக்கும் ராட்சத பாறைகளை, ரயில்வே ஊழியர்கள் சீரமைத்து வந்தனர். இதனையடுத்து, சீரமைப்பு பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயில் போக்குவரத்து வழக்கம் போல் மீண்டும் துவங்கியுள்ளது.

காலை 7.10 மணிக்கு 200க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் புறப்பட்டுச் சென்றது. கடந்த 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் மலை ரயில் போக்குவரத்து துவங்கியதால் இதில் பயணிக்க முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...