கோத்தபய ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் பியுசிஎல் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் பியுசிஎல் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று மாலை இந்தியா வந்துள்ளார். டெல்லியில் இன்று பிரதமர் மோடி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அரசியல் தலைவர்களை சந்திக்கிறார். இந்நிலையில், கோத்தபய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் பி.யு.சி.எல் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த கோத்தபய ராஜபக்சேவை பாஜக இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து உபசரிப்பதை கண்டித்தும், சர்வதேச போர்க்குற்றவாளியை உடனே இந்தியாவில் இருந்து திரும்பிப்போக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொலை குற்றவாளி கோத்தபய ராஜபக்சேவே திரும்பி போ என பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோசங்களை எழுப்பினர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...