மேட்டுப்பாளையத்தில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம்; முதற்கட்ட பணிகள் தீவிரம்

கோவை: மேட்டுப்பாளையத்தில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமிற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை: மேட்டுப்பாளையத்தில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமிற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. கோவில்களில் ஆலய பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் யானைகளுக்கு ஏற்படும் மனச்சோர்வையும் அதன் உடல் நலத்தை பாதுகாக்கவும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம், கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தாண்டு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமானது டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கான முதற்கட்ட பணிகள் தேக்கம்பட்டியில் யானைகள் முகாம் நடைபெறும் இடத்தில் துவங்கியுள்ளது.



யானைகள் கட்டிவைக்கப்படும் இடம், பாகன்கள் தங்குமிடம் போன்ற பகுதிகள் புதர் மண்டி கிடப்பதால் அதனை சீரமைக்கும் பணியில் இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், யானை முகாம் நடைபெறும் இடத்தில் மின்சார வசதிகள், கூடாரங்கள் அமைப்பது போன்ற பணிகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவில்களில் திருப்பணிகளை மட்டும் மேற்கொண்டு வரும் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த முகாமில், கடந்தாண்டு 30க்கும் மேற்பட்ட யானைகள் பங்கேற்ற நிலையில் இந்தாண்டும் முகாம் சிறப்புடன் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...