இலங்கை அதிபர் வருகையை கண்டித்து கோவை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; திராவிட தமிழர் கட்சியினர் கைது

கோவை: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற திராவிட தமிழர் கட்சியினர் 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற திராவிட தமிழர் கட்சியினர் 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.



இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று மாலை இந்தியா வந்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில், கோத்தாபய ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திராவிட தமிழர் கட்சியினர் முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர்.



இந்த போராட்டத்தின் போது, உடலில் கட்டுப்போட்டு கோத்தபய இராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திராவிடர் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், அவர்களை இழுத்துச் சென்று கைது செய்தனர்.



அப்போது, இலங்கையில் தமிழர்களை கொலை செய்த ராஜபக்சே திரும்பி செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தினர். 



இதனையடுத்து, முற்றுகையில் ஈடுபட முயன்ற 20க்கும் மேற்பட்ட திராவிட தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...