விடுபட்ட வாக்காளர் பட்டியலை உடனடியாக சரி செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு - சிட்டிசன் போரம் அமைப்பு

கோவை: விடுபட்ட வாக்காளர் பட்டியலை உடனடியாக சரி செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என சிட்டிசன் போரம் அமைப்பினர் தெரிவித்தனர்.

கோவை: விடுபட்ட வாக்காளர் பட்டியலை உடனடியாக சரி செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என சிட்டிசன் போரம் அமைப்பினர் தெரிவித்தனர்.



கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிட்டிசன் போரம் அமைப்பின் தலைவர் பராஷர் பாண்டே கூறுகையில், கோவை ஆர் எஸ் புரத்தில் வார்டு எண் 23, 25வது வார்டுகள் இனைக்கப்பட்டு 71வது வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 11,701 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 9159 பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளதாகவும், ஏற்கனவே பட்டியலில் இருந்த 2542 பேர் விடுபட்டுள்ளதாக கூறிய அவர்கள், இதே போன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.



100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என அரசு விளம்பரம் செய்து வரும் நிலையில்,, தற்போது வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது ஜனநாயக உரிமையைப் பாதிக்கும் செயல் என குற்றம் சாட்டினர். மாநகராட்சி மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் குறித்த புள்ளி விபரங்கள் உள்ள நிலையில், இதனை உடனடியாக ஒரு வார காலத்தில் சரி செய்ய வேண்டும் எனவும் இதுகுறித்து அரசியல் கட்சியினருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் இல்லை எனில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...