கோவை மாநகராட்சி சுகாதார பணிகள்‌ குறித்து அலுவலர்களுடன்‌ மாநகராட்சி ஆணையர் ஆய்வுக்‌ கூட்டம்‌

கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தலைமையில்‌ மாநகராட்சியில்‌ சுகாதார பணிகள்‌ குறித்து அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.

கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தலைமையில்‌ மாநகராட்சியில்‌ சுகாதார பணிகள்‌ குறித்து அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:-

மாநகராட்சியின்‌ அனைத்து வார்டுகளிலும்‌ சாலைகள்‌, வீதிகளில்‌ தூய்மைப்‌ பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்‌, திடக்கழிவு மேலாண்மைப்‌ பணிகளையும்‌, மக்கும்‌, மக்காத குப்பைகளை வீடுகளிலிருந்து சேகரிக்கும்‌ பணிகளையும்‌, மண்டலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள TATA Ac சிறுவாகனங்கள்‌ மூலம்‌ மக்கும்‌ கழிவுகள்‌ சேகரிக்கும்‌ பணிகளையும்‌, கொசு ஒழிப்பிற்காக மருந்து அடிக்கும்‌ பணிகளையும்‌, குப்பைகள்‌ போடுவதற்கான தொட்டிகள்‌ அனைத்து பகுதிகளிலும்‌ சரியான முறையில்‌ பராமரிக்க வேண்டும்‌ எனவும்‌, டெங்கு காய்ச்சல்‌ தடுப்பு பணிகளை சம்மந்தப்பட்ட பணியாளர்கள்‌ தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்‌ எனவும்‌, பாதாள சாக்கடை மற்றும்‌ கழிவு வாய்க்கால்களை ஜே.சி.பி. இயந்திரங்கள்‌ மூலம்‌ சுத்தம்‌ செய்யும்‌ பணிகளை ஒடேமேற்கொள்ள வேண்டும்‌ எனவும்‌ சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஐடாவத்‌ அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில்‌ மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள்‌, சுகாதார ஆய்வாளர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...