கோவையில் மூதாட்டி கொலை வழக்கு; அலட்சியமாக புலனாய்வு செய்த காவல் நிலைய ஆய்வாளர் இடைநீக்கம்

கோவை: கோவை வெரைட்டி ஹால் ரோடு காவல் எல்லைக்குட்பட்ட சலீவன் வீதி பகுதியில் மூதாட்டியின் மரணத்தை அலட்சியமாக புலனாய்வு செய்த விவகாரத்தில் வெரைட்டி ஹால் ரோடு காவல் ஆய்வாளரை இடைநீக்கம் செய்து மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.

கோவை: கோவை வெரைட்டி ஹால் ரோடு காவல் எல்லைக்குட்பட்ட சலீவன் வீதி பகுதியில் மூதாட்டியின் மரணத்தை அலட்சியமாக புலனாய்வு செய்த விவகாரத்தில் வெரைட்டி ஹால் ரோடு காவல் ஆய்வாளரை இடைநீக்கம் செய்து மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.

கோவை சலீவன் வீதி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மனைவி ரங்கநாயகி (70). இவர் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த வெரைட்டி ஹால் ரோடு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளார். ஆனால், தற்போது இந்த மூதாட்டியின் மரணம் கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நகைக்காகக் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மூதாட்டியின் கொலை வழக்கை முறையாக புலனாய்வு செய்யாமல் அலட்சியமாக இருந்ததற்காக, மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் காவல் ஆய்வாளரை காவல் ஆணையாளர் சுமித் சரண் இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல, செந்தில்குமார் மீது வட மாநிலத்தைச் சேர்ந்த பவானி என்பவர் தங்கியிருந்த அறையில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பறிமுதல் செய்துள்ள சம்பவத்தை மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவில்லை என்பதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...