கோவை: கோவை அடுத்த பீளமேடு பகுதியைச் சேர்ந்த நபர் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடியுடன் இருப்பது போல போட்டோஷாப்பில் செய்த புகைப்படத்தை வெளியிட்டதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பீளமேடுபுதூர் பகுதியை சேர்ந்தவர் கவி தமிழ்ச்செல்வன். இவர் தன்னை நுகர்வோர் அமைப்பு நிர்வாகி என கூறி, உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உடன் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து உரையாடிய புகைப்படத்தை கிராஃபிக் மூலமாக, பிரதமர் இவருடன் கை குலுக்குவது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து எழுந்த புகாரையடுத்து, மாநகர சைபர் கிரைம் போலீசார் கவி தமிழ்ச்செல்வனிடம் இன்று விசாரணை நடத்தினர். விளம்பரத்திற்காக இந்த புகைப்படங்களை வெளியிடுகிறாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.