திருப்பூர்: திருப்பூரில் சிஐடி போலீசார் என கூறி மளிகை கடை உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் பணத்தை ஆறு பேர் கொண்ட கும்பல் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் வேலம்பாளையம் சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் ரூடா ராம் செளத்ரி. இவர் திருப்பூர் ஓடக்காடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி இவரது கடைக்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று, தாங்கள் சிஐடி போலீஸ் எனவும், மளிகை கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்று வருவதாகவும், ஆதலால் ரூடா ராம் செளத்ரி மீது வழக்கு பதிய போவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், வழக்கு போடாமல் இருப்பதற்கு ரூ 5 லட்சம் பணம் தர வேண்டும் என கேட்டுள்ளனர். பயந்து போன ரூடா ராம் செளத்ரி மூன்றரை லட்சம் தருவதாக ஒப்புக் கொண்டு மூன்று லட்சத்தை அங்கேயே தந்துள்ளார். மேலும் ஐம்பதாயிரம் பணத்தை பின்பு தருவதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து, ஆறு பேர் கொண்ட கும்பல் தொடர்ச்சியாக போனில் தொடர்பு கொண்டு பணத்தை கேட்டதில் சந்தேகமடைந்த ரூடா ராம் செளத்ரி அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் ஆறு பேர் கொண்ட கும்பலை சேர்ந்த ஒருவர் பணம் பெற வந்த பொழுது, மறைந்திருந்த போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர் பெயர் சாதிக் அலி(44) என்பதும் மற்றவர்கள் திருப்பூரைச் சேர்ந்த சையது இப்ராகிம்(47), முகமது ஹனீபா(42), என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஐம்பதாயிரம் பணம் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாபு, ரகமத்துல்லா, அஸ்ரப் ஆகியோரை தேடி வருகின்றனர்.