பாரத் பெட்ரோலிய தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு : பாரத் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை தனியாருக்கு விற்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு இத்தகைய முடிவை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை பாரத் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள் அறிவித்தனர்.



இதன் ஒரு பகுதியாக, கோவை கணபதி பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலிய அலுவலகம் முன்பு வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 24 மணி நேரம் நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்று, மத்திய அரசின் முடிவை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...