கோவை: நீலகிரியை சேர்ந்த திருமணமாகாத இளம் பெண் தான் பெற்ற குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் விட்டு தப்பியோடியதையடுத்து, குழந்தையானது மருத்துவமனை நிர்வாகம் முன்னிலையில் சரணாலயம் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த மாதம் 23ம் தேதி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமாகாத இளம் பெண் நிறைமாத கர்ப்பிணியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவருக்கு தாய் சேய் பிரிவில் அன்று இரவே பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை குறைவாக இருந்ததால் இன்குபேட்டரில் வைத்து குழந்தை பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், குழந்தையைப் பெற்ற தாய் திடீரென குழந்தையை விட்டு மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றார். இதைத் தொடர்ந்து பந்தய சாலை போலீசார், குழந்தையின் தாய் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர், குழந்தையின் நிலை குறித்து குழந்தைகள் நலக்குழுவுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று சிகிச்சை முடிவடைந்ததையடுத்து குழந்தையானது கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்தர் வேல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர் முன்னிலையில் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சரணாலயம் காப்பக பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.