ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் வெளியீடு

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் கீழ் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்த நிலையில், 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, ஐந்தாம் வகுப்பு தேர்வு, அடுத்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20ம் தேதி முடிவடைகிறது. எட்டாம் வகுப்பு தேர்வு, மார்ச் 30ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 17ம் தேதி முடிவடைகிறது.

ஐந்தாம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய மூன்று பாடங்களுக்கும், எட்டாம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.

பொதுத்தேர்வு நடத்தப்பட்டாலும் மூன்றாண்டுகளுக்கு மாணவர்கள் தேர்வில் தோல்வியடையச் செய்யமாட்டார்கள் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...