கோவை: கோவை ரயில் நிலையத்தில் கோவையில் இருந்து மங்களூர் செல்லும் ரயிலில் இருந்து தவறி விழ இருந்த பெண் பயணியை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக ரயிலில் ஏற்றி அனுப்பிய சம்பவம் பொதுமக்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இன்று காலை சுமார் 6:30 மணி அளவில் கோவை ரயில்நிலையத்தில் உள்ள நடைமேடை எண் மூன்றில், கோவையில் இருந்து மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல வந்தது. பயணிகள் ஏறிய பின்னர், ரயிலானது 6:40 மணி அளவில் கோவை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.
இந்த நிலையில், ரயிலில் ஏறுவதற்காக குடும்பத்துடன் வந்த பயணிகள், ஓடும் ரயிலில் தாங்கள் கொண்டு வந்த பைகளுடன் ஏற முயன்றனர். இதில் கடைசியாக வந்த பெண் பயணி ஒருவர் ரயிலில் ஏறும் போது, படிக்கட்டில் நிலை தடுமாறிக் கீழே விழும் நிலைக்குச் சென்றார்.
அப்போது, நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவலர் பாலகிருஷ்ணன், துரிதமாகச் செயல்பட்டு, கீழே விழும் நிலையிலிருந்த பயணியைக் காப்பாற்றி பாதுகாப்பாக ரயிலின் உள்ளே அனுப்பிவைத்தார். ரயில்வே காவலரின் துரிதமான நடவடிக்கை அங்கே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை தொடர்ந்து, ரயில்வே துறையின் உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் ரயில்வே காவலரின் நடவடிக்கைக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.