மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டெருமைகள்; அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்

நீலகிரி: நீலகிரி அடுத்த மஞ்சூர் அரசு மருத்துவமனை அருகே தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டெருமை கூட்டத்தைக் கண்டு அச்சமடைந்த தொழிலாளர்கள் இலை மூட்டைகளை வீசிவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர்.


நீலகிரி: நீலகிரி அடுத்த மஞ்சூர் அரசு மருத்துவமனை அருகே தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டெருமை கூட்டத்தைக் கண்டு அச்சமடைந்த தொழிலாளர்கள் இலை மூட்டைகளை வீசிவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் தற்போது இந்த காட்டு மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, காட்டு மாடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவைகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் காய்கறி தோட்டங்களில் முகாமிடுவதால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவே பயப்படுகின்றனர். தொழிலாளர்களை விரட்டும் காட்டெருமைகள் முட்டுவதால் காயம் ஏற்படுவதோடு, சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.



இந்நிலையில், மஞ்சூர் பகுதியில் அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டம் மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு நாள் தோறும் காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக வருவதால் அச்சமடைந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், காட்டெருமைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...