கோவை: கோவை மாநகராட்சியில் சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டதைக் கண்டித்தும், சொத்துவரி உயர்வை கண்டித்தும் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகராட்சியில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யும் உரிமையை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் வழங்கியதை கண்டித்து சொத்துவரி உயர்வு மற்றும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று இரவு காவல்துறையினர் திமுகவினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறை தடையை மீறி திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உள்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேட்டியளித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், 26 ஆண்டுகளுக்கு சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்,நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தினர். இது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்தியும் கோவை மாநகராட்சி நிர்வாகமும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

மேலும், சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும் எனவும், காவல்துறையினர் ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்குக் கூட ஆளும்கட்சி நிர்பந்தம் காரணமாக அனுமதி மறுப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறை நடவடிக்கையை கண்டித்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 800க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.