கோவை: இந்திய உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி மருத்துவமனையில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியா முழுவதும் நவம்பர் 27ம் தேதி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் உடல் உறுப்பு தானம் நாளாக இன்று அனுசரிக்கப்படுகிறது. உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் முதலிடம் பெற்று வருகிறது.
இந்நிலையில், 10வது இந்திய உடல் உறுப்பு தானத்தை முன்னிட்டு, கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை மற்றும் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக உடல் உறுப்பு தானம் பற்றியான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 4 பெட்டிகள் அடங்கிய உடல் உறுப்புகளை கோவை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாகவும்,தொடர் ஓட்டமாகவும் மருத்துவமனைக்கு 4 நிமிடங்களில் கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் விதமாக விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழிப்புணர்வுக்காக நடந்த ஒத்திகை உடல் உறுப்புகளை, ஏர்போர்ட் அதாரிட்டி டி.ஜி.எம் ராமகிருஷ்ணன், வாங்கி கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஏர்போர்ட் அதாரிட்டி இயக்குனர் மகாலிங்கம், சட்டம், ஒழுங்கு காவல்துறை உதவி ஆணையர் சோமசுந்தரம், மருத்துவமனை டீன் ராமலிங்கம், இயக்குனர் புவனேஸ்வரன், மெடிக்கல் டூரிஸம் மேலாளர் சந்திரசேகரன், பி.எஸ்.ஜி நர்சிங் கல்லூரி முதல்வர் ஜெயசுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உடல் உறுப்பு தானம் செய்த உறவினர்களுக்கு நன்றிகள் தெரிவிக்கப் பட்டது. மேலும், உடல் உறுப்பு தானம் செய்வதற்கு அனைவரும் முன் வர வேண்டும் என்று பொதுமக்களுக்கும் மருத்துவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.