கல்வி கடன் வாங்கியவர்களை நெருக்குவதை வங்கி நிர்வாகம் கைவிட வேண்டும் - பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்

கோவை: கல்வி கடன் வாங்கியவர்களை உடனடியாக பணத்தை கட்ட வேண்டும் என நெருக்குவதை வங்கி நிர்வாகம் கைவிட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை: கல்வி கடன் வாங்கியவர்களை உடனடியாக பணத்தை கட்ட வேண்டும் என நெருக்குவதை வங்கி நிர்வாகம் கைவிட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-

கல்வி கடன் பெற்றவர்களிடம் பணத்தை செலுத்த வேண்டும் என வங்கி நிர்வாகங்கள் தொடர்ந்து நிர்பந்தம் அளிப்பதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து புகார்கள் வருகிறது. படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும், இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு கல்விக்கடனை அடைத்துவிடலாம் என்கிற நம்பிக்கையின் காரணமாகவே மாணவர்கள் கல்விக்கடனை பெறுகின்றனர். ஆனால் ஆட்சியாளர்களின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக நிரந்தர வேலையில் இருப்பவர்கள் கூட வேலையில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

மேலும், அரசுத்துறை காலிப்பணியிடங்களும் நிரப்ப படுவதில்லை, மாறாக தனியார் துறைக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசுத்துறை ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. சட்டசமூக பாதுகாப்பான வேலை என்பது தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. வேலையின்மையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கல்வி கடன் பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை உடனடியாக பணத்தை கட்ட வேண்டும் என வங்கி நிர்வாகங்கள் நிர்ப்பந்திப்பதாகப் புகார்கள் வருகிறது.

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை போன்ற காரணங்களால் நல்ல நிலையில் தொழில் செய்து வந்த தொழில் முனைவோர்களே நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வங்கியில் பெற்ற கடனை கட்ட கால அவகாசம் கேட்டு விண்ணப்பித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை வங்கி நிர்வாகங்கள் உணர வேண்டும். ஒரு சில வங்கிகள், கல்வி கடன் பெற்றவர்களிடம் பணம் கட்டவில்லையென்றால் ஜப்தி செய்வோம், எந்த வேலையும் கிடைக்காமல் செய்வோம் போன்ற மிரட்டல் பணிகளை தொடர்வதாக புகார்கள் வருகிறது.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடனாகப் பெற்ற பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வாராக்கடன் என தள்ளுபடி செய்துவிட்டு, ஏழை எளிய மாணவர்கள் கல்விக்கடனாகப் பெற்ற சிறிய தொகையை வசூலிக்க உட்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்தி வங்கி நிர்வாகங்கள் மிரட்டுவது ஏற்புடையதல்ல. இதுபோன்ற நடவடிக்கையால் மதுரையில் லெனின் என்கிற மாணவன் தற்கொலை செய்து கொண்டதும், இந்த அதிர்ச்சியில் இருந்து தமிழகம் மீளாத நிலையில், மீண்டும் வங்கி நிர்வாகங்கள் கல்விக்கடன் பெற்றவர்களை நெருக்கடியில் தள்ளி மனவுழைச்சலை ஏற்படுத்தும் நடவடிக்கை வங்கி நிர்வாகங்கள் உடனடியாக கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பி.ஆர்.நடராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...