கோவை: கோவை டாடாபாத் அருகே திருநங்கைகள் மூன்று பேர் இளைஞரிடம் பணத்தை ஆசிர்வதித்து தருவதாக கூறி 10 ஆயிரத்து 500 ரூபாயை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை போத்தனூர் கதிரவன் நகர் பகுதியை சேர்ந்தவர் இம்ரான்கான் (33). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இப்படியிருக்க அவர் தனது பணிநிமித்தம் டாடாபாத் ஒன்பதாவது வீதியில் உள்ள நிறுவனத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்ப தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துள்ளார்,
அப்போது அங்கே வந்த மூன்று திருநங்கைகள் இம்ரான்கானிடம் பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளனர்.
இதையடுத்து இம்ரான் கான் பத்து ரூபாய் கொடுத்தபோது அதை இம்ரான்கான் தலையில் வைத்து ஆசீர்வதிப்பது போல ஏமாற்றி அவரது பாக்கெட்டுக்குள் கைவிட்டு உள்ளனர். இதையடுத்து அவரது பாக்கெட்டில் இருந்த 10 ஆயிரத்து ஐநூறு ரூபாயை பறித்து அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதையடுத்து இம்ரான் கான் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்து வருகின்றனர்.
கோவையில் கடந்த சில நாட்களாகவே திருநங்கைகள் பணத்தை ஆசீர்வதித்து தருவதாக வழிப்பறியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.