நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களில் ஆய்வுக்குப்பின் கட்டுமான பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும் - நீலகிரி மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள 283 இடங்களில் முதல்நிலை ஆய்வாளர்கள் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வினை மேற்கொண்ட பின்னரே கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள 283 இடங்களில் முதல்நிலை ஆய்வாளர்கள் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வினை மேற்கொண்ட பின்னரே கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு, பேரிடர் அபாயம் உள்ள 283 இடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முதல் நிலை ஆய்வாளர்கள் மற்றும் சுரங்கத் துறை, வனத்துறை மற்றும் பொறியியல் துறையின் மூலம் மூன்று குழுக்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்ட பின்னரே கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி பெற முடியும் என தெரிவித்தார்.

மேலும் ஓவேலிப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்குத் தமிழக அரசின் மூலம் 20 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இதில் 789 குடியிருப்புகளுக்கு மின்சார வசதி மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, நடைபாதை வசதி, சாலை வசதிகள் உள்ளிட்டவற்றை உச்சநீதிமன்ற உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமான பணிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்றார்.

அதேபோல, கல்லட்டியிலிருந்து மசினகுடி செல்லும் தாழ்வான மலைப்பாதையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டுமென மசினகுடி பகுதி சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், வெளிமாநில வாகனங்கள் மலைப்பாதையில் இயக்கும் பொழுது, தொடர்ந்து ஏற்படும் விபத்துகளால் மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் விபத்துகள் தடுக்கும் பொருட்டு கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்களை இயக்க தொடர்ந்து தடை நீட்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...