தமிழகத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு திராவிட கட்சிகள் தான் ஆட்சி செய்யும் - தமிமுன் அன்சாரி

கோவை: தமிழக அரசியல் வெற்றிடத்தை ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி நிரப்பி இருக்கின்றனர் எனவும் தமிழகத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு திராவிட கட்சிகள்தான் ஆட்சி செய்யும் என மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

கோவை: தமிழக அரசியல் வெற்றிடத்தை ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி நிரப்பி இருக்கின்றனர் எனவும் தமிழகத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு திராவிட கட்சிகள்தான் ஆட்சி செய்யும் என மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

கோவையில் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கலந்து கொண்டார்.



அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவல் துறையில் தமிழ்மொழியில் தகவல் தொடர்புகள் இருக்கும் என்ற டி.ஜி.பி திரிபாதியின் உத்தரவு வரவேற்கத்தக்கது எனவும் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நடந்த அரசியல் சூழல் ஜனநாயகத்திற்கு மிக பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது எனவும் தற்போது நல்ல சூழல் திரும்பி இருக்கின்றது எனவும் தெரிவித்தார். அங்கு நடைபெற்ற பெருந்தவறுக்கு துணை போன அம்மாநில ஆளுநர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மாநில ஆளுநரை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மத்திய அரசு ஆளுநர்களை கொண்டு இரட்டை நிர்வாகத்தை மேற்கொள்ள முயற்சிக்க கூடாது என்றும் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செய்வதைப் போல மராட்டியத்தில் ஆளுநர் செய்கின்றார் எனவும் இது ஜனநாயக படுகொலை எனவும் தெரிவித்த அவர், உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை மேயர், நகராட்சி தலைவர்கள் போன்ற பொறுப்புகளை நேரடியாக தேர்வு செய்வதுதான் சரியாக இருக்கும் என்றார்.

கோடம்பாக்கத்தில் உறங்கிக் கொண்டு இருந்த சிலரை தூண்டிவிட்டு, தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக வடமாநிலத்தை சேர்ந்த சக்திகள் சொல்ல வைப்பதாகவும், கோடம்பாக்கத்தில் இருந்து அரசியல் அதிகாரத்திற்கு வர விரும்புவதில் தவறில்லை என்று கூறிய அவர், அரசியல் வெற்றிடத்தை ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நிரப்பி இருக்கின்றனர் எனவும் தமிழகத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு திராவிட கட்சிகள்தான் ஆட்சி செய்யும் என்று தெரிவித்தார்.

அற்புதம் நிகழும், அதிசயம் நிகழும் என்று சிலர் சொல்வதை மக்கள் ரசிக்கின்றனர் ஆனால், ஏற்றுக்கொள்ளவில்லை என கூறியவர், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்பது மனித நேய ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு என்று கூறினார்.

மேலும், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் அதிமுக குறித்த விமர்சனங்கள் கவலையளிப்பதாகத் தெரிவித்த அவர், இதற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தான் பதில் அளிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா இருந்திருந்தால் அதிமுக மீது இது போன்ற விமர்சனங்களை யாரும் வைத்திருக்க முடியாது என தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...