திருப்பூர்: திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வீரபாண்டி பகுதியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் விபத்தில்லாத முறையில் வாகனத்தை இயக்குவது மற்றும் உத்தரவு சின்னம், எச்சரிக்கை சின்னம், தகவல் சின்னம் போன்றவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக விளக்கப்பட்டது.

மேலும், மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் முறையில் வாகனத்தை இயக்குவது, ஏர்பேக் வெளிப்படும் முறை மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் போன்றவை செய்முறைகளை விளக்கப்பட்டது.

இதில் ஏராளமான மாணவர்கள் இந்த கண்காட்சியை கண்டு ரசித்தனர்.