கோவை: கோவை மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையாளர் முனைவர் கா.பாஸ்கரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி, வாலாங்குளம் நடைபாதை ரூ.24.31 கோடி மதிப்பிலும், வாலாங்குளம் (மேம்பாலத்தின் அடியில் ரூ.23.83 கோடி மதிப்பிலும் நடைபெற்று வருகிற வளர்ச்சிப் பணிகளையும், உக்கடம் பெரிய குளக்கரையில் ரூ.224.10 கோடி மதிப்பிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளையும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.22 மாநகராட்சி பாரதி பூங்கா அருகில் உணவு கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளிலிருந்து பயோ கேஸ் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டும் நகராட்சி நிர்வாக ஆணையாளர் முனைவர் கா.பாஸ்கரன் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் சரவணகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக, கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தின் முன்பு பெரிய கடை வீதியில் மாநகராட்சி சார்பில் சாலைகளில் பாதசாரிகள், சைக்கிளில் செல்லும் பொதுமக்களுக்கு வசதிகள் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வண்ணம் தீட்டப்பட்டிருந்த பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹா்மந்தர் சிங், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.