கோவை: கோவை அடுத்த துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட நல்லாம்பாளையம் பகுதியில் தாய் உட்பட குழந்தைகள் இரண்டு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சந்தேக மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை அடுத்த துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட நல்லாம்பாளையம் பகுதியில் தாய் உட்பட குழந்தைகள் இரண்டு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சந்தேக மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம் வ.ஊ. சி.,நகர் பகுதியை சேர்ந்த தம்பதிகள் சிவகுமார் மற்றும் கெளரி(29).

இவர்களுக்கு திவ்யதர்ஷினி (13), பிரனேஷ் (11) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த இரண்டு குழந்தைகளுக்கும் மனவளர்ச்சி குன்றி உள்ளதால் இவர்கள் அதே பகுதியில் உள்ள அரசின் சிறப்பு பள்ளியில் படித்து வருகின்றனர்.
மேலும், கணவர் சிவகுமார் பல்வேறு காரணங்களைச் சொல்லி தினமும் குடித்து வருவதால் மனைவி கௌரிக்கும் அவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனால் கௌரி கடந்த சில மாதமாக துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட அதே பகுதியில் தனது தந்தையின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கௌரியின் வீட்டார் உறவினரின் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க வெளியூர் சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பியபோது கதவு திறக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவரின் தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது, கௌரி உட்பட குழந்தைகள் 2 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த துடியலூர் போலீசார், இறந்த நிலையில் உள்ள மூன்று பேரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், தாய் உட்பட இரண்டு குழந்தைகளின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் தலைமறைவாக இருந்த கௌரியின் கணவர் சிவக்குமாரை பிடித்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.