மேட்டுப்பாளையத்தில் போலி தங்க கட்டிகளை கொடுத்து ரூ.2 லட்சம் மோசடி செய்த பெண் கைது

கோவை: மேட்டுப்பாளையம் அருகே போலி தங்க கட்டிகளை கொடுத்து துணிக்கடை பெண் உரிமையாளரை ஏமாற்றிய பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே போலி தங்க கட்டிகளை கொடுத்து துணிக்கடை பெண் உரிமையாளரை ஏமாற்றிய பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பிரிவு பகுதியினை சேர்ந்தவர் கவிதா. இவர் அதே பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு துணி எடுக்க அடிக்கடி வரும் லட்சுமி என்பவருடன் கவிதாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒரு நாள் கடைக்கு வந்த லட்சுமி, தனது கணவர் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் எனவே தனக்கு அதன் மூலம் தங்க கட்டிகள் கிடைத்துள்ளது என்றும் ஆனால் தனது கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அதனை விற்றுக் குடித்து விடுவார் என்று அச்சமாக உள்ளதால் தங்க கட்டிகளை வைத்துக் கொண்டு பணம் தருமாறு கேட்டுள்ளார். இதற்காக மாதிரியாக சிறிய கட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அப்போது, அது உண்மையான தங்கமாக இருந்ததால், அதனை நம்பி சுமார் இரண்டு லட்சம் பேசி முடிவு செய்து அரை கிலோ தங்கக் கட்டியை கவிதாவிடம் லட்சுமி கொடுத்துள்ளார். பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு அதனைப் பரிசோதனை செய்த போது, அது தங்கம் முலாம் பூசப்பட்ட போலி தங்கக்கட்டி என தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா, லட்சுமியை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் தலைமறைவாகி உள்ளார். இந்த நிலையில் இன்று காரமடையில் அதே பாணியில் தங்க கட்டிகளை வைத்து மற்றொருவரிடம் லட்சுமி பேரம் பேசியதாக தோழிகள் மூலம் தகவல் கிடைக்கப் பெற்று காரமடை வந்த கவிதா, லட்சுமியை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

பின்னர் கைதான லட்சுமியிடம் விசாரித்ததில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தொடர்ந்து இதுபோன்று பெண்களிடம் பழகி அவர்களை ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலி தங்க கட்டிகளை வைத்து ஏமாற்றிய பெண்ணை கைது செய்த பெரியநாயக்கண்பாளையம் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...