கோவை: கோவில் நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வலியுறுத்தி கோவை சிவானந்த காலணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் கோவில் நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு இம்மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என சமீபத்தில் அறிவித்தது. கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்படும் என்கிற முடிவை பின்வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதன் ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி தலைமையில் கோவை சிவானந்த காலணியில் தர்ணா போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.

இதில் கோவில் நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்குப் பட்டா வழங்க வேண்டும், அரசாணை எண் 18ல் திருத்தம் செய்யக்கூடாது, வீடுகளுக்கு உயர்த்தி வசூலிக்கப்பட்ட வீட்டு வரியை நடப்பு ஆண்டு வீட்டு வரி கணக்கில் சேர்த்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.