கோவை: தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கடந்த 28 நாட்களுக்கு முன்பு தண்டர்போல்ட் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் சீனிவாசனின் உடல் கோவையில் உள்ள எரியூட்டு மையத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

தமிழக - கேரள எல்லையில் உள்ள மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த அக்டோபர் 28 மற்றும் 29ம் தேதிகளில் தண்டர்போல்ட் சிறப்பு அதிரடி படையினருக்கும், மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களது உடல் திருச்சூர் அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 13ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு கோவையில் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னை நந்தனைச் சேர்ந்த மாவோயிஸ்ட் சீனிவாசன் என்பவரது உடல் அவரது சகோதரரான ராஜகோபால் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து, 28 நாட்களுக்குப் பிறகு கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள எரியூட்டு மையத்திற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.