கோவை: கோவையைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி பாலசிங்கம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த பாலசிங்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற செயலாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இவர் இன்று கோவை குற்றவியல் நீதிமன்றம் - 2ல் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த 17ம் தேதி நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் அவருடைய சமூக வலைதள கணக்கான டிவிட்டர் பக்கத்தில் திருமாவளவன் பேசிய வீடியோவை பதிவு செய்து, அதில் இந்து சமுதாயத்தவர் எங்கு பார்த்தாலும் அவரை செருப்பால் அடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவமானப்படுத்தி கருத்து தெரிவித்து இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து மனுதாரர் பாலசிங்கம் கூறும்போது ;-
காயத்ரி ரகுராமின் டிவிட்டர் பக்கத்தில் திருமாவளவன் குறித்து அவதூறாக பதிவிட்டது கண்டனத்துக்குரியது. இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறினார்.