கோவை: வால்பாறையில் உள்ள அய்யர்பாடி பகுதியில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அய்யர்பாடியில் உள்ள ஆக்சிஸ் வங்கி ஏ.டி.,எம் மையத்தில் கடந்த 20ம் தேதி காலையில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் வீரம்மாள், காவலர் அருள்மணி உட்பட தனிப்படையினர் அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி பதிவுகளை பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
வால்பாறையிலுள்ள கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன் இரண்டு குற்றவாளிகள் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய குற்றவாளி தலைமறைவாக உள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வால்பாறை நகர் மட்டுமின்றி தேயிலை தோட்டப்பகுதிகளில் காவல்துறையினரின் தீவிர ரோந்தும் வாகன சோதனையும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலையில் ஸ்டான்மோர் சந்திப்பில் வாகன சோதனையின்போது, முன்னுக்குப் பின் முரணான பேசிய வாலிபர் பிடிபட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஈரோட்டைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரத்தின் மகன் ஜீவானந்தம் என்பதும் ஏ.டி.எம் உடைப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என தெரியவந்தது. மேலும் அவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.