கோவை: பிரபாகரனின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் வே பிரபாகரனின் 65வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வால்பாறை அண்ணா நகர் பகுதியில் கட்சியின் கொடியேற்றப்பட்டு உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வால்பாறை நகைக் கடை வீதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வள்ளுவர் குடில் என்ற பெயரில் மக்கள் சேவை அலுவலகம் துவக்கி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதன் முக்கிய நிகழ்வான இரத்ததான முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வால்பாறை அரசு மருத்துவமனை இரத்த பரிசோதனை மைய ஆலோசகர் செல்வம் மணி மற்றும் செவிலியர்கள் இரத்த பரிசோதனை மற்றும் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த முகாமில் 50க்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம் வழங்கினர். இங்கு சேகரிக்கப்பட்ட இரத்தம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த முகாமில் நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் சண்முகம், மாவட்ட பொறுப்பாளர் அய்யப்பன், தமிழ்வாணன், லோகேஸ்வரன், பிரபாகரன் வெள்ளிங்கிரி உட்பட ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.