கோவை: கோவை அடுத்த காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பட்டாசு வெடித்தும் கேக் வெட்டியும் உற்சாகமாக கொண்டாடினர்.
கோவை: கோவை அடுத்த காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பட்டாசு வெடித்தும் கேக் வெட்டியும் உற்சாகமாக கொண்டாடினர்.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 65-வது பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்களாலும், ஈழ ஆதரவாளர்களாலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் பிரபாகரன் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் கேக் வெட்டப்பட்டும், பட்டாசு வெடித்தும் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது பேட்டியளித்த ஆறுச்சாமி, ஈழம் கண்டிப்பாக அமைந்தே தீரும் எனவும் ஈழம் அமைய காலதாமதம் ஆகலாம் எனவும் ஆனால் ஈழம் அமையும் வரை தந்தை பெரியார் திராவிடர் கழகம் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

மேலும், ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை கொளுத்தி, சிறையில் துன்பப்பட்டு உயிர்நீத்த போராளிகளுக்குத் திராவிடர் விடுதலை கழகத்தினர் காந்திபுரம் பெரியார் சிலை முன்பாக வீரவணக்கம் செலுத்தி ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.