கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ ரூ.2 கோடியே 93 லட்சம்‌ மதிப்பிலான வளர்ச்சிப்பணிகளை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில்‌ வாடு எண்‌.89, 90, 91 பகுதிகளில்‌ ரூ.2 கோடியே 93 இலட்சத்து 20 ஆயிரம்‌ மதிப்பிலான வளர்ச்சிப்‌ பணிகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில்‌ வாடு எண்‌.89, 90, 91 பகுதிகளில்‌ ரூ.2 கோடியே 93 இலட்சத்து 20 ஆயிரம்‌ மதிப்பிலான வளர்ச்சிப்‌ பணிகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.



கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.91 தொட்டராயன்‌ கோவில்‌ வீதி திட்ட சாலையில்‌ மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.1 கோடியே 76 லட்சம்‌ மதிப்பில்‌ அமைக்கப்பட்டுள்ள சாலையினை பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்காக அமைச்சர் அவர்கள்‌ திறந்து வைத்து பார்வையிட்டார்.



பின்னர்‌, ரூ.63.90 லட்சம்‌ மதிப்பில்‌ புதிய தெருவிளக்குகள்‌ அமைக்கும்‌ பணிக்கான பூமி பூஜையினை துவக்கி வைத்தார். மேலும்‌, வார்டு எண்‌.91 குளத்துப்பாளையம்‌ அம்மாசை கவுடர்‌ வீதி முருகன்‌ கோவில்‌ அருகில்‌ ரூ.19.80 லட்சம்‌ மதிப்பில்‌ சத்துணவுக்‌ கூடம்‌ கட்டுவதற்கான பூமி பூஜையினையும்‌, வார்டு எண்‌.89 என்‌.டி.பி. வீதியில்‌ நியாயவிலைக்கடை கட்டுவதற்கான பூமி பூஜையினையும்‌ அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.



பின்னர்‌, வார்டு எண்‌.89 பள்ளிக்கூட வீதியில்‌ ரூ.12.50 இலட்சம்‌ மதிப்பில்‌ கட்டப்பட்ட மகளிர்‌ சுயஉதவிக்குழு கட்டிடத்தினையும்‌, வார்டு எண்‌.89 காமாட்சியம்மன்‌ கோவில்‌ வீதி காந்தி மைதானத்தில்‌ ரூ.16 இலட்சம்‌ மதிப்பில்‌ புதிய கலையரங்கத்தையும்‌ திறந்து வைத்து பார்வையிட்டார். 



மேலும்‌, வார்டு எண்‌.90 கோவைப்புதூர்‌ நூலகத்தில்‌ ரூ.5 இலட்சம்‌ மதிப்பில்‌ கட்டப்பட்ட கூடுதல்‌ அறையினை திறந்து வைத்து நூலகத்தில்‌ வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சிகளில்‌ மொத்தம்‌ ரூ.2 கோடியே 93 இலட்சத்து 20 ஆயிரம்‌ மதிப்பிலான வளர்ச்சி பணிகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

பின்னர்‌, வார்டு எண்‌.89 சுண்டக்காமுத்தூார்‌, அய்யப்பன்‌ கோவில்‌ கபடி மைதானத்திலும்‌, வார்டு எண்‌.90 கோவைப்புதார்‌, & கிரவுண்ட்‌ மைதானத்திலும்‌ நடைபெற்ற முதலமைச்சரின்‌ சிறப்பு மக்கள்‌ குறைதீர்க்கும்‌ முகாம்‌ மற்றும்‌ அரசு நலத்திட்ட உதவிகள்‌ வழங்கும்‌ விழாக்களில்‌ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ வழங்கினார்.

இவ்விழாக்களுக்கு மாவட்ட ஆட்சியர்‌ கு.ராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமை வகித்தார்கள்‌. மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார் ஜடாவத்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரை முருகன்‌ வரவேற்று பேசினார்.

இவ்விழாக்களில்‌, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.89 சுண்டக்காமுத்தூரில்‌ 55 பேருக்கும்‌, வார்டு எண்‌.90, 91 கோவைப்புதூரில்‌ 19 பேருக்கும்‌ ஆகமொத்தம்‌ 74 பேருக்கு அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின்கீழ்‌ பயனாளிகளுக்கு அனுமதி உத்தரவுகளையும்‌, வார்டு எண்‌.89 சுண்டக்காமுத்தூரில்‌ 15 பேருக்கு புதிய குடிநீர் இணைப்புக்கான உத்தரவுகளையும்‌ ஆகமொத்தம்‌ 89 பேருக்கு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்‌, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ தி.ரா.ரவி, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌, உதவி செயற்பொறியாளர்‌ சுந்தரராஜன்‌, மற்றும்‌ அலுவலர்கள்‌, ஏராளமான பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...