கோவை: உள்ளாட்சி தேர்தல் பணிக்கான கோவை மண்டல இரண்டாம் கட்ட ஆயத்த கூட்டம் தேர்தல் ஆணையர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை: உள்ளாட்சி தேர்தல் பணிக்கான கோவை மண்டல இரண்டாம் கட்ட ஆயத்த கூட்டம் தேர்தல் ஆணையர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஆட்சியர்களுடன் தமிழக தேர்தல் ஆணையர் ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறார்.

தேர்தல் ஆணையர் தலைமையில் முதல் கட்ட ஆய்வு முடிவடைந்த நிலையில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து ஆட்சியர்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்ட இரண்டாம் கட்ட ஆயத்த கூட்டம் தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இதில், உள்ளாட்சி தேர்தல்கள் நடத்துவது தொடர்பாகவும், தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்துவது, பாதுகாப்பு பணிகள், வாக்குப் பதிவு மற்றும் எண்ணிக்கை தொடர்பாக, அரசு அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்தல், வாக்கு பதிவு இயந்திரங்கள் சரிபார்த்தல், வாக்கு சாவடி மையங்கள் உள்ளிட்ட பணிகள் குறித்து இந்த ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி பேசுகையில், கடந்த கால அனுபவங்கள் கொண்டு வரும் உள்ளாட்சி தேர்தலை சிறந்த முறையில் நடத்திட ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
உள்ளாட்சி தேர்தல் கடும் சவாலான பணியாக இருக்கும் எனவும் இதில் பாரபட்சம் இல்லாமல் தேர்தல் நடைபெற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றவர், தேர்தல் விதிமுறைகள் குறித்து வழங்கப்பட்ட கையேடுகளை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கொடுத்து இதன் விதிமுறைகள் படி நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.