திருப்பூர்: திருப்பூர் அருகே பூமலூரில் வாடிக்கையாளர்களின் மூன்று லட்ச ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக ஓய்வுபெற்ற தபால் ஊழியர் மீது அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட 20க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் விவசாயிகள், 100 நாள் வேலை திட்ட பயனாளிகள், முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூமலூரில் உள்ள மத்திய அரசின் தபால் நிலையத்தில் தங்களது வரவு செலவு கணக்கு வைத்துள்ளனர்.
இந்த தபால் நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பாலன்(60) என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக தபால் நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பணி ஓய்வு பெற்றுள்ளார். இருந்த போதிலும் அவர் தொடர்ந்து, அதே தபால் நிலையத்தில் தபால் மற்றும் பணப் பட்டுவாடா மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், கூலித் தொழிலாளர்கள், 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் என தபால் நிலைய சேமிப்பு கணக்கில் வைத்திருந்த சுமார் இரண்டே முக்கால் லட்சம் ரூபாயை ஓய்வு பெற்ற தபால் ஊழியர் பாலன் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பணத்தை பறிகொடுத்த பலரும் இன்று பூமலூர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மங்கலம் போலீசாரிடம் பணத்தை இழந்த பொது மக்கள், உடனடியாக இழந்த பணத்தை மீட்டு தரவேண்டும் என்றும் கையாடல் செய்த பாலன் மீது கடும் நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்றும் அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர். இதனிடையே, தலைமறைவாக உள்ள பாலனை மங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.