நீலகிரி: உதகையிலுள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் பணிபுரிந்த பள்ளி துணை தலைமையாசிரியை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அதே பள்ளியில் அவரை தலைமையாசிரியராக நியமிக்க வேண்டுமென அப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுடன் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

உதகை மெயின் பஜாரில் துணை தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆசிரியை வனிதா. இவர், தன்னுடைய சொந்த செலவில் பல நலத்திட்டங்களை இப்பள்ளிக்கு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர், இப்பள்ளியில் இருந்து வேறு ஒரு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுச் சென்றுள்ளார்.
சென்ற வருடம் கல்வி ஆண்டின் இறுதியில் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 5 பேர் மட்டுமே இருந்த நிலையில், பள்ளியை மூடும் சூழ்நிலை உருவானதாகவும், தற்போது ஆசிரியை வனிதா அவர்களின் முயற்சியால் இந்த வருடம் பள்ளியில் 35 குழந்தைகள் பயின்று வருவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.

எனவே, குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இடமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர் வனிதாவை இதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி நியமனம் செய்ய வேண்டும் என பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.