நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் திடீரென ஊருக்குள் புகுந்த காட்டுப் பன்றிகளால் பொது மக்கள் அச்சமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூரை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் காட்டெருமை, கரடி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர், இவை அவ்வப்போது உணவு மற்றும் மற்றும் குடிநீர் தேடி குடியிருப்புப் பகுதிக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.
இந்நிலையில் இன்று திடீரென 20க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் இங்கு உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் அச்சமடைந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இந்த காட்டுப்பன்றிகள் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக இப்பகுதியை சுற்றித்திரிந்து பின்னர் தானாக வனத்திற்குள் சென்று விட்டன.
இப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், காட்டுப்பன்றிகளை வேட்டையாட சிறுத்தைகளும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருப்பதால், காட்டுப் பன்றிகள் மேலும் ஊருக்குள் வராமல் வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.