கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் குறைதீர்ப்பு நாளான இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். மனு நீதி நாளன்று பாதுகாப்பு காரணம் கருதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டு முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கோவை வேடபட்டி பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, அவரை போலீசார் தர்ணா செய்ய இங்கு அனுமதி இல்லை என எச்சரித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெகநாதன் அங்கிருந்த காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து அவரை அங்கிருந்த போலீசார், வாகனத்தில் ஏற்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர் வைத்திருந்த மனுவில் 15 ஆடுகள் வைத்து பிழைப்பு நடத்தி வந்ததாகவும், அதில் மூன்று ஆடுகள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக வடவள்ளி மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், தனது ஆடுகளை விரோதம் காரணமாக மூன்று பேர் கொன்று இருக்கலாம் என சந்தேகப்படுவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்பதற்காக மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.