கோவை: வால்பாறையில் நடைபாதை உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி சார்பில் அகற்ற முயன்ற போது தி.மு.க வினர் நகராட்சியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி அலுவலகம் முதல் காந்தி சிலை வரை நடைபாதையை ஆக்கிரமித்து 24 கடைகள் உள்ளன. இந்த கடைகளை காலி செய்யவும் மாற்று இடத்தில் கடையை வைத்து கொள்ள நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதன் காலக்கெடு கடந்த மாதம் 27ம் தேதியே முடிவடைந்த நிலையில் இன்று நகராட்சி ஆணையர் சரவணபாபு தலைமையில் நகராட்சி அலுவலர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடைக்காரர்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வால்பாறை நகர தி.மு.க வினர் கடைக்காரர்களுக்கு ஆதரவாக நகராட்சியை முற்றுகையிட்டு ஆணையாளருடன் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் நகராட்சி ஆணையர் சரவணபாபு, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் நகர செயலாளர் பால்பாண்டி, வியாபாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன் படி 24 கடைக்காரர்களும் இங்கு எப்படி வரிசையில் இருந்தார்களோ, அதன்படி கடையை மாற்று இடத்தில் வைத்துக்கொள்வது, அதற்கு உதவியாக நகராட்சி அலுவலர் ரகுபதி மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தலைவர் தணாபாண்டியன் ஆகியோர் இடத்தை தேர்வு செய்து தருவது மற்றும் வால்பாறை தபால் நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு வார காலத்திற்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டனர்.