முதியோர் உதவித் தொகைக்கு மனு அளிக்க வந்த மூதாட்டியிடம் பணத்தை ஜேப்படி செய்த திருடர்கள்

கோவை: முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வந்த போது பேருந்தில் பணத்தை திருடர்கள் ஜேப்படி செய்ததால் கண்ணீர் மல்க மூதாட்டி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வந்த போது பேருந்தில் பணத்தை திருடர்கள் ஜேப்படி செய்ததால் கண்ணீர் மல்க மூதாட்டி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சொர்னகணி(86). இவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விடவே, இன்று காலை 9 மணி அளவில் முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அரசு பேருந்து 15K என்ற பேருந்தில் வந்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு எழுதி கொடுத்தவர், அதற்கு உண்டான பணத்தை கொடுக்க பையை பார்த்த போது, தான் கொண்டு வந்த பையில் வைத்திருந்த ரூ.3900 பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்து அழத் தொடங்கினார்.

இதனைக்கண்ட அங்கிருந்த காவலர்கள் மற்றும் மனு நீதி முகாம் பணியில் இருந்த பத்திரிகையாளர் அவரிடம் விசாரித்ததில், தனது பணத்தை பேருந்தில் வரும் போது யாரோ திருடி விட்டதாகவும், தனது சொந்த செலவிற்கு சிறிது சிறிதாக சேர்த்த பணம் எனவும் பணம் தொலைந்து குறித்து தனது மகன்களுக்கு தெரிந்தால் தன்னை திட்டுவார்கள் என பரிதாபமாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அங்கிருந்த நிருபர்களில் ஒருவர் புகார் மனு எழுதி கொடுத்தார். பின்னர் அதனை பெற்று கொண்ட அவர், பந்தய சாலை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார். பணத்தை பறிகொடுத்த மூதாட்டி கண்ணீர் மல்க அழுதது அங்கிருந்தவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...