திருப்பூரில் கந்துவட்டி கொடுமை காரணமாக மனைவியுடன் பனியன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

திருப்பூர்: திருப்பூரில் கந்து வட்டி கேட்டு குடும்பத்தை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அலுவலகம் முன்பு இன்று பனியன் நிறுவன தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் கந்து வட்டி கேட்டு குடும்பத்தை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அலுவலகம் முன்பு இன்று பனியன் நிறுவன தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம்( 51). இவர் பனியன் நிறுவனத்தில் இஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (45). இவர்கள் கடந்த 21 வருடமாக திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள பூச்சிக்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி 3700 ரூபாய் கந்து வட்டிக்கு தனது உறவினர் செல்வம் (48) என்பவரிடம் வாங்கி உள்ளார். அதன்படி, ஒவ்வொரு வாரமும் 400 ரூபாய் கட்டி வந்துள்ளார். இதுவரை 1,800 ரூபாய் வட்டி மட்டும் செலுத்தியுள்ளார். இந்நிலையில், வேலையின்மை காரணமாக கடந்த இரண்டு வாரமாக வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடியாட்களை வைத்து செல்வம், கடந்த 19ம் தேதி வீடு புகுந்து சந்தானம் குடும்பத்தாரை தாக்கி உள்ளனர்.

இதையடுத்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சந்தானம் மற்றும் அவரது மனைவி, இதுகுறித்து மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், போலீசார் முறையான நடவடிக்கை எடுக்காததால் மன விரக்தி அடைந்த சந்தானம் இன்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் நுழைவு வாயில் முன்பாக பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டு மத்திய போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...