டெங்கு விழிப்புணர்வு குறித்த சித்த மருத்துவ பேரணி; 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

கோவை: ஏ.டி.எஸ் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்கன் குனியா நோய்கள் பரவுவதை தடுக்க பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி துவக்கி வைத்தார்.

கோவை: ஏ.டி.எஸ் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்கன் குனியா நோய்கள் பரவுவதை தடுக்க பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி துவக்கி வைத்தார்.



இந்த பேரணியில், சூலூர் ஆர்.வி.எஸ் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, நவக்கரையில் உள்ள ஜே.எஸ்.எஸ் நேச்சுரோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மார்டின் ஹோமியோபதி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் நிலவேம்பு செடி மற்றும் பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி வ.ஊ.சி மைதானத்தில் நிறைவுற்றது. இதனையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வ.ஊ.சி மைதானத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்த மருத்துவ அலுவலர் தனம் கூறுகையில், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை, டெங்கு காய்ச்சலால் மூன்று வயது முதல் பதினான்கு வயது வரை உள்ள குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் இதனை கட்டுப்படுத்த 15 நாட்களுக்கு ஒரு முறை காலை மட்டும் ஐந்து நாட்கள் நிலவேம்பு கஷாயம் அருந்த வேண்டும் என்றார்.



இந்த பேரணியில் அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சவுந்தர வேல், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர்.ரவிக்குமார், அரசு மருத்துவக் கல்லூரி டீன் அசோகன், சுகாதார பணி இணை இயக்குனர் கிருஷ்ணா, துணை இயக்குனர் பானுமதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...