திருப்பூரில் சொத்தை எழுதி வாங்கி கொண்டு கைவிட்ட பேரன்; ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்கள்

திருப்பூர்: திருப்பூரில் சொத்தை ஏமாற்றி எழுதிக் கொண்ட பேரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வயது முதிர்ந்த கணவன், மனைவி இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் சொத்தை ஏமாற்றி எழுதிக் கொண்ட பேரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வயது முதிர்ந்த கணவன், மனைவி இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பெரிச்சிபாளையம் பி கே ஆர் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து (81). இவரது மனைவி சரஸ்வதி (78). இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் மணியின் மகன் செல்வராஜ் கடந்த 2010ம் ஆண்டு அவரது பெயரில் பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள 2 3/4 சென்ட் சொத்தை உயில் எழுதி வைக்கும்படியும் தங்களை நன்கு பார்த்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அவர் சொன்னதின் பேரில் முதியவர்கள் உயில் எழுதிக்கொடுக்க சம்மதித்தனர். ஆனால் சொத்தை செல்வராஜ் பேரில் மாற்றி எழுதிக் கொடுத்த பின்னர், முதியவர்களை கவனிக்காமல் கைவிட்டுவிட்டார்.

இதனால் விரக்தி அடைந்த வயது முதிர்ந்த கணவன், மனைவி இருவரும் இன்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். 



அப்போது, அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை மீட்டு தெற்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...