கோவை: மஹாராஸ்டிரா மாநிலத்தில் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடந்துள்ளது என கோவை டிவிஎஸ் நகர் பகுதியில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
கோவை: மஹாராஸ்டிரா மாநிலத்தில் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடந்துள்ளது என கோவை டிவிஎஸ் நகர் பகுதியில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ஆளுநரை கைப்பாவையாக வைத்து கொண்டு கொல்லைப்புற வழியாக பாஜக ஆட்சியமைத்துள்ளது எனவும், பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடாதது, ஆளுநர் பாரபட்சமாக செயல்படுகிறார் என்பதை காட்டுகிறது எனவும் குற்றம்சாட்டினார்.
மேலும், மஹாராஸ்டிராவில் சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டுமென தெரிவித்த அவர், மாற்று கட்சி ஆட்சியுள்ள மாநிலங்களில் ஆட்சி கலைப்பு, குதிரைபேரம், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது உள்ளிட்ட ஜனநாயக விரோத செயல்பாடுகளில் பாஜக தொடர்ந்து ஈடுபடுகிறது என அவர் கூறினார்.
பண, அதிகார பலத்தை கொண்டு பாஜக, எதிர்கட்சிகளை ஒடுக்குகிறது எனவும், எதிர்கட்சிகளை பழிவாங்கும் பாஜகவின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல எனவும் அவர் தெரிவித்தார். மேலும், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, பிரதமரை சந்தித்து நீட் தேர்வில் விலக்கு கேட்க வேண்டும் எனவும், நீட் தேர்வில் விலக்களிக்க வேண்டுமென பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி நாடகமாட கூடாது எனவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.