கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 2 1/4 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் சரகத்தில் திருட்டு மற்றும் செல்போன் வழிப்பறி அடிக்கடி நடப்பது சம்பந்தமாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் மேற்பார்வையில் கருமத்தம்பட்டி ஆய்வாளர் சண்முகம் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 19ம் தேதி இரவு கருமத்தம்பட்டி - அன்னூர் ரோடு வேணி மெஸ் அருகே டேனியல் என்பவர் செல்போனில் பேசியபடி நடந்து செல்லும் போது, இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த மூன்று நபர்கள் செல்போனை பிடுங்கிச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதேபோல, கடந்த 20ம் தேதி மாலை சோமனூர் கணேசபுரம் பகுதியில் தனியாக வசித்து வரும் தெய்வாத்தாள் என்பவர் வீட்டிற்குள் வைத்திருந்த சுமார் 2 1/4 பவுன் தங்க சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் இயங்கி வந்த தனிப்படையில் உதவி ஆய்வாளர் அரவிந்தராஜன், காவலர் மகேந்திரன் மற்றும் காவலர் யுவராஜா ஆகியோர் கணியூர் டோல்கேட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் வட்டமடித்து கொண்டிருந்ததை பார்த்து சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணை மேற்கொண்டதில் அவர்களது பெயர் சூலூரை சேர்ந்த சிவக்குமார் (21), கரையாம்பாளையம் சேர்ந்த மணிகண்டன்(20), கிணத்துக்கடவை சேர்ந்த பிரவின் (21) ஆகியோர் மேற்படி திருட்டு வழக்கில் ' சம்பந்தப்பட்டவர்கள் என தெரியவந்ததையடுத்து அவர்களை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 2 1/4 பவுன் தங்க சங்கிலி மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.