நீலகிரியில் 'கேன்சர் கில்லர்' எனப்படும் முள் சீத்தா பழ சீசன் நிறைவு; பழத்தை வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 'கேன்சர் கில்லர்' எனப்படும், முள் சீத்தா பழ சீசன் முடியும் நிலையில் உள்ளதால் இதனை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 'கேன்சர் கில்லர்' எனப்படும், முள் சீத்தா பழ சீசன் முடியும் நிலையில் உள்ளதால் இதனை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ குணம் மிக்க பல்வேறு பழ வகைகள் விளைந்து வருகின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை விளையக்கூடிய கேன்சர் கில்லர் என்றழைக்கப்படும் முள் சீத்தா பழ விளைச்சல் இந்த மாதத்துடன் முடிவதால் இதனை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்த பழங்கள் தற்போது வண்டிச்சோலை, பர்லியார், எல்லநள்ளி உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே விளைவதால் இதற்கான கிராக்கி அதிகரித்து காணப்படுகிறது.



இந்த பழங்கள் குன்னூரை தவிர, கூடலுார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சில இடங்களில் மட்டும் விளைவிக்கப்படுகிறது. தற்போது, சீசன் முடியும் தருவாயில் உள்ளதால், குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட பல இடங்களிலும் விற்பனைக்கு உள்ளன. இதன் விலை கிலோவுக்கு, 400 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மருத்துவ குணம் நிறைந்துள்ளதால், இதற்கு அதிகளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து சித்த மருத்துவர்கள் கூறுகையில், 'இந்த பழம் நிமோனியா, சிறுநீரக குழாய், குடல், தோல் நோய்களை குணப்படுத்தும். இந்த பழத்தின் இலைகள், பட்டை, வேர் போன்றவை, உடல்நலத்திற்கு நல்லது. எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தரும் இந்த முள் சீத்தாவை வளர்க்க, தோட்டக்கலைத் துறையினர், உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...