கோவை: தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு விற்பனைக்கு வந்த ஆறு அடி உயரம் கொண்ட மயில் மீனை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மீனாட்சி பேருந்து நிறுத்தம் அருகே மீன் கடை நடத்தி வருபவர் வெங்கடேஷ், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக மீன் வியாபாரம் செய்து வரும் நிலையில், இவர் மீன்களை தூத்துக்குடி பகுதியில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில், மீன்களை ஆர்டர் செய்து காத்திருந்த வெங்கடேஷ்க்கு இன்று தூத்துக்குடியில் இருந்து மீன் இறக்கப்பட்ட போது, அதில் ஆள் உயரமுள்ள சுமார் ஆறு அடி உயரம் கொண்ட கூர்மையான மூக்கு கொண்ட மயில் என்ற வகை மீன் இருந்தது, அதன் எடையைப் பார்த்த போது இருபது கிலோ இருந்தது.
இதுவரை அதுபோன்ற உயரமான மீன்களை பார்த்திராத அசைவ பிரியர்கள் வெங்கடடேஷ் கடைக்கு வந்து மயில் மீனை ஆச்சரியத்துடன் பார்த்து சென்று வருகின்றனர்.