கோவை: கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இரண்டு தமிழ்நாடு பீரங்கி தேசிய மாணவர் படை யுனிட்(2 (TN) BTY NCC)சார்பாக அதன் கமான்டிங் அதிகாரி லெப்டினட் கர்னல் கிரிஸ் பர்தான் அவர்கள் தலைமையில் நவம்பர் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை பீளமேடு பி எஸ் ஜி கலைக்கல்லூரியில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு ஆண்டு இறுதி பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் கோவை அரசு கல்லூரி ,பி எஸ் ஜி கலை கல்லூரி, பிஷப் அப்பாசாமி கல்லூரி மற்றும் புனித அந்தோணியார் உயர்நிலை பள்ளி, ஒண்டிபுதூர் அரசு மேல் நிலைப்பள்ளி, தேவாங்கா மேல்நிலைப்பள்ளி, செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கே கே நாயுடு மேல் நிலைப்பள்ளி, தாராபுரம் விவேகம் மேல் நிலைப்பள்ளி, எஸ் எஸ் வி எம் பள்ளி போன்ற கல்லூரி மற்றும் பள்ளிகளை சார்ந்த தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர் 500 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெறுகிறார்கள்.
இராணுவ வீரர்களாக ராம் வக்கில் யாதவ், மூர்த்தி, பல்வான் சிங், மணிகண்டன், ராம்ஜி, பாண்டியன் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர்களான ஜி.ஆல்பர்ட் அலெக்ஸாண்டர், சுதாகர், ஜாகிர் உசேன், ஆன்டனி, காமராஜ், சத்திய பிரகாஷ், பெலிக்ஸ் போன்றோர் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.

பயிற்சி முகாமில் மாணவர்கள் இராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சி, அணிவகுப்பு பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி, பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி, முதலுதவி குறித்த பயிற்சி, நைட் மார்ச்சில், மேப் ரிடிங், ஆளுமை பயிற்சி, கூடாரம் அமைப்பது போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.
தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக கால்பந்து போட்டி, கபடி போட்டி, ஹாக்கி, நீண்ட தூர ஓட்ட போட்டி, துப்பாக்கி சுடும் போட்டி, அணிவகுப்பு போட்டி, கலை நிகழ்ச்சி போட்டி போன்ற போட்டிகள் நடத்தி பரிசு கோப்பைகள் வழங்கப்பட இருக்கின்றது.
சமூக சேவைகளான தூய்மை இந்தியா, எயிட்ஸ் விழிப்புணர்வு பேரணி, மரம் நடும் விழா, இரத்ததான முகாம், கண்பரிசோதனை முகாம் போன்ற சமூக சேவைகளும் செய்யப்பட இருக்கின்றது.

இறுதி நாளன்று மெகா அணிவகுப்பும், கன் டிரில்(GUN DRILL)லும், பரிசளிப்பு விழாவும் நடைபெறும். முகாம் பற்றிய செய்திகளுக்கு 9443913769 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.