வால்பாறையில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; இருவர் கைது

கோவை: வால்பாறையில் உள்ள அய்யர்பாடி பகுதியில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: வால்பாறையில் உள்ள அய்யர்பாடி பகுதியில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அய்யர்பாடியில் உள்ள ஆக்சிஸ் வங்கி ஏ.டி.,எம் மையத்தில் கடந்த 20ம் தேதி காலையில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி பதிவுகளை பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், வால்பாறையிலுள்ள கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதை உளவுப்பிரிவு காவல்துறையினர் கண்டு பிடித்தனர். இதனை தொடர்ந்து, அப்பகுதியை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் காவல்துறையினர் சுற்றி வளைத்து அங்கு பதுங்கி இருந்த பொள்ளாச்சி நெகமம் பகுதியைச்சேர்ந்த ராமசாமி மகன் கோபால்சாமி மற்றும் வால்பாறை அய்யர்பாடி ஜே.இ.பங்களா பகுதியைச்சேர்ந்த ராஜா ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கைது செய்யப்பட்ட இருவரும் வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகளை சம்பவம் நடைபெற்ற 2 தினங்களில் கண்டு பிடித்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...